நியூசிலாந்தின் புதிய பெண் பிரதமராக தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஜெசிந்தா ஆண்டர்ன் தேர்வு

தினகரன்  தினகரன்

வெலிங்டன்: நியூசிலாந்தில் கடந்த மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சி 56 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 46 இடங்களிலும் வெற்றி பெற்றன. எனினும் ஆட்சியமைக்க 61 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், கூட்டணி ஆட்சி அமைக்க தேசிய கட்சியும், தொழிலாளர் கட்சியும் முயற்சி செய்தன. இதனை தொடர்ந்து பர்ஸ்ட் கட்சியினர், தங்களது ஆதரவு யாருக்கு என்பது குறித்து கட்சியின் தலைவர் வின்ஸ்டன் பீட்டர்ஸ், தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டமும் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், தொழிலாளர் கட்சியுன் ஜெசிந்தா ஆண்டர்னின்க்கு ஆதரவு அளிப்பதாக வின்ஸ்டன் பீட்டர்ஸ் அறிவித்தார். இதன்மூலம், 10 ஆண்டு காலமாக நீடித்த தேசிய கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. 37 வயதே நிரம்பிய ஜெசிந்தா ஆண்டர்ன் விரைவில் பிரதமராக பதவியேற்க உள்ளார். துணை பிரதமர் பதவியை வின்ஸ்டன் பீட்டர்சுக்கு வழங்க ஜெசிந்தா விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் இதுகுறித்து பரிசீலனை செய்துவருவதாக பீட்டர்ஸ் கூறியுள்ளார். ஜெசிந்தா தலைமையிலான மந்திரி சபையில் இடம்பெறும் மந்திரிகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் இலாகா விவரம் அடுத்த வாரம் வெளியிடப்படும் என தொழிலாளர் கட்சி அறிவித்துள்ளது.

மூலக்கதை