மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வசனங்களை நீக்க தேவையில்லை.. காலா இயக்குநர் ரஞ்சித்

FILMI STREET  FILMI STREET
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வசனங்களை நீக்க தேவையில்லை.. காலா இயக்குநர் ரஞ்சித்

விஜய் நடிப்பில் மெர்சல் படம் வெளியாவதற்கு முன்னரே பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது தீபாவளிக்கு ரிலீஸ் ஆனபின்பும், படத்தில் ஜிஎஸ்டி குறித்த வசனங்களை விஜய் பேசியதால், அரசியல் அரங்கில் மிகவும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

பாஜ கட்சியை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் முதல் குரலாக அந்த காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்பதை பார்த்தோம்.

இவரையடுத்து மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணனும் அவர்களும் தன் எதிர்ப்பை பதிவு செய்தார்.

ஆனால் விஜய் பேசிய வசனங்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசு குரல் கொடுத்துள்ளார்.

மெர்சலுக்கு தணிக்கை சான்று இருந்தால்போதும்; பாஜகவிடம் சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியமில்லை என அவர் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

தற்போது ரஜினியின் காலா பட இயக்குனர் ரஞ்சித் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது…

மெர்சல் படத்தில் மக்களின் பிரச்னைகளை தான் சொல்கிறார்கள். அந்த காட்சிகளுக்கு மக்கள் ஆதரவு உள்ளது.

ஜிஎஸ்டி வரி குறித்த காட்சிகளை நீக்க தேவையில்லை.” என  தெரிவித்துள்ளார்.

Kaala director Ranjith supports Vijays GST dialogue in Mersal

மூலக்கதை