சம்பள சர்ச்சை! - மரீன்-லூ-பென் விளக்கம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
சம்பள சர்ச்சை!  மரீன்லூபென் விளக்கம்!!

ஜனாதிபதி தேர்தலின் பின்னர், தேசிய முன்னணி கட்சியின் தலைவர் மரீன் லூ பென் முதன் முறையாக நேற்று வியாழக்கிழமை இரவு, தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் வழங்கினார். இதில் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு பதில் அளித்துள்ளார். 
 
இவ்வருடம், மரீன் லூ பென்னின் சம்பளம் 3000 யூரோக்களில் இருந்து 5000 யூரோக்களாக அதிகரித்துள்ளது தொடர்பாக விளக்கமளித்தார். தேசிய முன்னணி கட்சி தலைவராக எனக்கு எவ்வித வருமானமும் இல்லை. செலவுகள் தான் அதிகமாக உள்ளது. பா-து-கலே மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எனக்கு இந்த 2000 யூரோக்கள் அதிகரிப்பு தேவைப்படுகிறது!' என தெரிவித்தார். சம்பளம் 66 வீதத்தால் கடந்த ஜூலை மாதம் முதல் அதிகரித்துள்ளது. 
 
மேலும், அவர் தெரிவிக்கும் போது, 'வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் இந்த அதிகரிப்பு அவசியமாகிறது!' என குறிபிட்டுள்ளார்.

மூலக்கதை