நவம்பர் முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் எழுச்சி பயணம்: ஸ்டாலின் அறிவிப்பு

தினகரன்  தினகரன்

சென்னை: நவம்பர் முதல் வாரத்தில் இருந்து டிசம்பர் வரை தமிழகம் முழுவதும் எழுச்சி பயணம் மேற்கொள்ளப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பயண விவரம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என ஸ்டாலின் தெரிவித்தார். கட்சியை பலப்படுத்தவும், ஆட்சியின் அவலங்களை எடுத்துரைக்கவும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது என அவர் கூறினார். சென்னை அறிவாலயத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

மூலக்கதை