பொது இடங்களில் வை-பை பயன்படுத்தினால் சைபர் தாக்குதல்: மத்திய அரசு எச்சரிக்கை!

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: பொது இடங்களில் வை-பை பயன்படுத்தினால் சைபர் தாக்குதலுக்கு ஆளாகக் கூடும் என்று மத்திய அரசின் தொழில்நுட்ப வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற பொது இடங்களில் இலவசமாகக் கிடைக்கும் வை-பை யை பொதுமக்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மத்திய அரசின் ஏஜென்சியான இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கணினித்துறை சார்ந்த பாதுகாப்புக்கான இந்த ஏஜென்சி இந்தியாவில் வை-பை மூலம் சைபர் தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. காரணம், பொது இடங்களில் கிடைக்கும் வை-பையை பயன்படுத்தும்போது தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இதனால் நமது செல்போனில் உள்ள படங்கள், வங்கிக் கணக்குகளின் தகவல்களை எளிதாக ஹேக்கர்கள் திருடிவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் அளித்துள்ளது. ஒருவரின் கிரெடிட் கார்டு விவரங்கள், பாஸ்வோர்டுகள், சாட் குறுஞ்செய்திகள் உள்பட அனைத்துத் தகவல்களையும் திருடக்கூடிய சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் இலவச வை-பையை தவிர்த்து விபிஎன் எனப்படும் நெட்வொர்க் சேவையைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை