ஜாலியன் வாலாபாக் சம்பவம்: மன்னிப்பு கேட்க இந்திய எம்.பி., வலியுறுத்தல்

தினமலர்  தினமலர்
ஜாலியன் வாலாபாக் சம்பவம்: மன்னிப்பு கேட்க இந்திய எம்.பி., வலியுறுத்தல்

லண்டன்: பஞ்சாபில் நடந்த துயர சம்பவமான ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கோரி பிரிட்டன் வாழ் இந்திய எம்.பி., அந்நாட்டு பார்லி.,யில் தனி நபர் மசோதா கொண்டு வந்தார்.
சுதந்திர போராட்டத்தின் போது கடந்த 1919-ம் ஆண்டு ஏப்ரலில் பஞ்சாப் மாநிலம் அமிர்சரசஸ் அருகே ஜாலியன் வாலாபாக் நகரில் பொதுமக்கள் ஒன்று கூடி அமைதி போராட்டம் நடத்தினர். அப்போதைய பிரிட்டன் ராணுவ கர்னல் டயர் உத்தரவின் பேரில் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி்ச்சூடு நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் ஒரு துயரமான நாள் அது.

இந்நிலையில் பிரிட்டனில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பிரிட்டன் வாழ் இந்திய எம்.பி., வீரேந்திர சர்மா அந்நாட்டு பாராளுமன்ற மக்கள் சபையில் தனி நபர் மசோதாவை கொண்டுவந்து விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

அதில், 1919ம் ஆண்டு பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த படுகொலைக்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். அமைதியுடன் ஒன்று கூடிய அப்பாவி மக்களை கொடூரமாக கொன்று குவித்ததை ஏற்க முடியாது. இதற்கு பிரிட்டன் அரசு முழு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும். அத்துயர சம்பவத்தை நினைவு தினமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். தனிநபர் மசோதாவிற்கு மேலும் 5 எம்.பி.,கள் ஆதரவு கையெழுத்திட்டுள்ளனர்.


வருத்தப்பட்ட கேமரூன்


கடந்த 2013-ம் ஆண்டு இந்தியா வந்த அப்போதைய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ஜாலியன் வாலாபாக் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கூறுகையில், ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் பிரிட்டன் வரலாற்றில் மறக்க முடியாத தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இது வெட்கத்திற்குரிய செயல் என்றார்.

மூலக்கதை