சொத்து குவிப்பு வழக்கு : ஷெரீப் மீது குற்றச்சாட்டு பதிவு

தினமலர்  தினமலர்

இஸ்லாமாபாத்: பாக்., முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீப் மற்றும் குடும்பத்தினர் மீது, பாக்., ஊழல் தடுப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவு செய்துஉள்ளது.
ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர், லண்டனில், சொத்துகள் வாங்கி குவித்துள்ளது தொடர்பான ஊழல் வழக்கில், பாக்., முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீபை தகுதி நீக்கம் செய்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்கும்படி, ஊழல் தடுப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
அதன்படி, நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான, மூன்று ஊழல் வழக்குகளை, நீதிமன்றம் விசாரிக்கிறது. இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்த போது, ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள், மரியம், மருமகன், முகமது சப்தார் ஆகியோர் மீது, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

மூலக்கதை