ஆப்கானிஸ்தான் ராணுவ முகாமில் தலிபான் தற்கொலை படை தாக்குதலில் 43 வீரர்கள் பலி

தினகரன்  தினகரன்

காபூல்: ஆப்கானிஸ்தான் ராணுவ முகாமில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 43 வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் முகாமிட்டு நாசவேலைகளில் ஈடுபட்டு வரும் தலிபான் உள்ளிட்ட தீவிரவாதிகளை அழிப்பதற்காக அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் படைகள் அங்கு முகாமிட்டு உள்ளன. தெற்கு காந்தகார் மாகாணத்தில் ராணுவ முகாம் ஒன்று உள்ளது. இதில் 60 ராணுவ வீரர்கள் பணியில் இருந்தனர். அப்போது உள்ளே நுழைந்த தற்கொலை படை தீவிரவாதிகள் 2 கார்களில் நிரப்பப்பட்டிருந்த குண்டுகளை வெடிக்க செய்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 43 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பலமணி நேரம் நடந்த தாக்குதலில் மேலும் 9 வீரர்கள் காயம் அடைந்தனர். தாக்குலில் ராணுவ முகாம் முற்றிலும் அழிந்து சேதமடைந்தது. இந்தியா கண்டனம்ஆப்கனிஸ்தான் ராணுவ முகாமில் தலிபான்கள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `ஆப்கனில் சமீப காலமாக அமைதி திரும்பி வந்த நிலையில் தீவிரவாதிகள் மீண்டும் நடத்திய தாக்குதல் கவலையளிக்கிறது. இந்தியா இதை வன்மையாக கண்டிக்கிறது. அங்குள்ள தீவிரவாதிகள் புகலிடங்களை உடனே அகற்றி, வன்முறைக்கு முடிவு கட்ட வேண்டும்\' என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை