இரகசியத்தை உடைத்த டோனி!

PARIS TAMIL  PARIS TAMIL
இரகசியத்தை உடைத்த டோனி!

வெற்றிக் கிண்ணங்களை இளம் வீரர்களிடம் கையளித்ததன் பின்னணியில் உள்ள இரகசியத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனி வெளியிட்டுள்ளார். பிரபல இந்தியப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
ஆடுகளத்திலும், ஆடுகளத்துக்கு வெளியிலும் தனது செயல்களால் இரசிகர்களையும் இரசிகரல்லாதோரையும் கவர்ந்திருப்பவர் டோனி. அணித் தலைவராகப் பதவியேற்றபின், தாம் விளையாடிய போட்டிகளிலும் போட்டித் தொடர்களிலும் வெற்றிபெற்ற சந்தர்ப்பங்களில், வெற்றிக் கிண்ணத்தை இளம் வீரர்கள் கையில் கொடுத்துவிட்டு, ஒரு ஓரமாகப் போய் நின்றுகொண்டவர் டோனி.
 
“அது ஒரு விளையாட்டுத் தந்திரம்” என்று தனது செயலுக்கு விளக்கமளித்திருக்கிறார் டோனி.
 
“வெற்றி பெற்றதற்கு அடையாளமே வெற்றிக் கிண்ணம். அதை யார் வைத்திருந்தால்தான் என்ன? அதேநேரம், ஒரு வெற்றிக் கிண்ணத்தை அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஒரு இளம் வீரரிடம் கையளிப்பதன் மூலம் அவரை உயர்த்திக் காட்டவும் அவரைச் சந்தோஷப்படுத்தவும், அவரைத் தன்னம்பிக்கை கொள்ளவைக்கவும் முடிகிறது.
 
“அதுமட்டுமல்ல. அந்த வெற்றிக்கு அவர் பங்களிப்புச் செய்திருப்பதை நாம் பாராட்டுகிறோம் என்பதையும் அது உணர்த்துகிறது. அத்துடன், தொடர்ந்து பொறுப்புடன் விளையாட வேண்டியதன் அவசியத்தையும் அவருக்கு அந்தக் கிண்ணம் உணர்த்தும்.
 
“அடுத்தடுத்த போட்டிகளில் அவர் இன்னும் சிறப்பாக விளையாடினால் அது அணிக்கு நல்லதுதானே?” என்று கூறியிருக்கிறார் டோனி!

மூலக்கதை