மனைவிக்கு எய்ட்ஸ் பரப்பிய கணவணிற்குச் சிறைத்தண்டனை!!

PARIS TAMIL  PARIS TAMIL
மனைவிக்கு எய்ட்ஸ் பரப்பிய கணவணிற்குச் சிறைத்தண்டனை!!

கொங்கொ நாட்டினைப் பிறப்பிடமாகவும், பிரான்சின் செய்ன் சன்-துனியில் வசித்து வந்த 54 வயதுடைய நபர் ஒருவர், தனக்கு எய்ட்ஸ் தொற்று இருப்பது தெரிந்தும், அதை மறைத்துத் தன் 37 வயதுடைய மனைவியுடன் உடலுறவில் இருந்துள்ளார்.
 
இதனால் இவரின் 37 வயதுடைய மனைவியும் எய்ட்ஸ் தொற்றிற்கு உள்ளாகி உள்ளார். இவர்களிற்குப் பிறந்த குழந்தைகள் இருவர் அதிஸ்டவசமாக எய்ட்ஸ் தொற்றிற்கு உள்ளாகவில்லை.
 
பல காலங்களாக நடந்து வந்த இந்த வழக்கில், நேற்று செய்ன் சன்-துனியின் குற்வியல் நீதிமன்றம் குற்றசவாளிக்கு ஆறுவருடச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
 
நோய் இருப்பது அறிந்தும், அதனை மறைத்து, தனது மனைவிக்கும் அந்தத் தொற்று நோயைப் பரப்பிய குற்றம், இவரிற்குச் சிறைத்தண்டனையை வழங்கி உள்ளது.
 

மூலக்கதை