வடகொரியாவிற்கு போர் அச்சுறுத்தல் விடுப்பது அபாயகரமானது - ஹிலாரி கிளிண்டன் கருத்து

தினகரன்  தினகரன்

சியோல்: வடகொரியாவிற்கு போர் அச்சுறுத்தல் விடுப்பது அபாயகரமானது என்று அமெரிக்காவின் ஜனநாயக கட்சி தலைவர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஹிலாரி கிளிண்டன் பங்கேற்றார். விழாவில் பேசிய அவர் வடகொரியா விவகாரத்தில் போரை நாடுவதாலும், ஆவேசமாக இருப்பதாலும் எந்த பயனும் இல்லையென்றார். அந்நாட்டிற்கு போர் அச்சுறுத்தல் விடுப்பது அபாயகரமானது என அவர் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர் இவ்விவகாரத்தில் குறுகிய பார்வையோடு செயல்பட கூடாது. அது அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் என எந்த நாடாக இருந்தாலும் சரி. இவ்விகாரத்தில் நிதானமாக செயல்பட வேண்டும். வடகொரியா மீதான தடையை வீவிரமாக அமல்படுத்த சீனா தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்றார்.ஐ.நா மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஆயுத பரிசோதனைகளில் ஈடுபட்டு வரும் வடகொரியாவின் நடவடிக்கையால் அமரிக்காவுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. வடகொரியாவின் செயல்பாடுகள் அமெரிக்காவிற்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் அடிக்கடி வார்த்தை போரில் ஈடுபட்டு ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து கொண்டுள்ளனர். குறிப்பாக கடந்த மாதம் 3-ம் தேதி வடகொரியா நடத்திய ஆறாவது பெரிய அணு ஆயுத சோதனையும், ஜப்பானுக்கு மேலே ஏவுகணையை பறக்க விட்ட சம்பவமும் அங்கு போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை