ஆப்கன் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 2,500 கி.மீ. தூரத்திற்கு முள்வேலி அமைக்கிறது பாகிஸ்தான்

தினகரன்  தினகரன்

இஸ்லமாபாத்: ஆப்கன் எல்லையை ஒட்டி தனது உள்நாட்டு பாதுகாப்பை பலபடுத்தும் வகையில் பாகிஸ்தான் 2,500 கி.மீ. தூரத்திற்கு முள்வேலி அமைத்து வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து தாலிபன் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. 750 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட உள்ளது. 9 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ள முள்வேலி திட்டத்திற்கு பாகிஸ்தான் அரசு ரூ.5,600 கோடி செலவிட திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் அங்கூர் அடாஸ் சுற்றுவட்டாரங்களில் வாழும் பழங்குடியின மக்கள் தங்களது உறவினர்களை சந்திப்பதில் சிக்கல் ஏற்படும் என்று வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தான் ராணுவம் முள்வேலி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதே போன்ற முள்வேலியை இந்திய எல்லையிலும் பாகிஸ்தான் அமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மூலக்கதை