சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!

PARIS TAMIL  PARIS TAMIL
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!

பிரான்சில் இருந்து சிறீலங்காவிற்கு விடுமுறைக்குச் சென்ற, பத்து வயதுச சிறுவன் இன்று லியோனில் சாவடைந்துள்ளார். விடுமுறைக்குச் சென்ற இடத்தில், சிறீலங்காவின் திக்வெல்லா கடற்கரையில், இவரை வெறிநாய் கடித்துள்ளது. ஆனால் இவரது குடும்பத்தினர் இதனைப் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்கவில்லை.
 
 
வெறிநாய் கடித்தால் அதன் மோசமான தாக்கம் 20 இலிருந்து 60 நாட்கள் வரை உடலில் இருக்கும். மிகவும் ஆபத்தான நிலையில் இந்தச் சிறுவன் கடந்த 4ம் திகதி வைத்திய சாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தான். இவனது இரத்தத்தைப் பரிசோதித்த பஸ்தர் நிறுவனம் இவரிற்கு வெறிநாய் (Rage) கடித்து அதன் நோய்த்தாக்கம் உள்ளதை உறுதிப்படுத்தியதை அடுத்து, ரேபிஸ் நோய் (விசர்நாய் நோய்) பிரான்சிற்குள் வந்திருப்பதை தேசியக் குறிப்பு மையமான CNR (entre national de référence) அறிவித்துள்ளது.
 
 
இந்தச் சிறுவன் நேற்றுச் சாவடைந்துள்ளான்.
 
இந்தச் சிறுவனுடன் தொடர்பில் இருந்த சக மாணவர்கள் மற்றும் குடும்பத்தினரிற்கு உடனடியாகத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த ரேபிஸ் நோயானது மிகவும் வேகமாகத் தொற்றும் ஆபத்துள்ளது.
 
 
சிறீலங்காவிற்கு விடுமுறைக்குச் செல்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இப்படியான பல உயிராபத்துக்கள் அங்கு காத்திருக்கின்றன.
 
பிரான்சில் 1924 ஆண்டிற்குப் பின்னர் விசர்நாய் நோய் வந்ததில்லை. 1970 இலிருந்து வெளிநாடுகளிற்குச் சென்று, இந்த நோயால் தாக்கப்பட்டு  23 பேர் சாவடைந்துள்ளனர்.
 

மூலக்கதை