பாடசாலை வாகனத்தோடு மோதிய உழவு இயந்திரம்! - 14 மாணவர்கள் காயம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பாடசாலை வாகனத்தோடு மோதிய உழவு இயந்திரம்!  14 மாணவர்கள் காயம்!!

பாடசாலை வாகனத்தோடு உழவு இயந்திரம் ஒன்று மோதுப்பட்டதில் 14 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அதில் பெண் ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார். 
 
Drôme மாவட்டத்தின் Montelimar நகரில் இந்த சம்பவம் இடபெற்றுள்ளது. Cléon-d'Andran பகுதியில் உள்ள Olivier-de-Serres உயர்கல்வி பாடசாலையில் இருந்து  34 மாணவர்களுடன் குறித்த பாடசாலை வாகனம் புறப்பட்டது. அதே பகுதியில், சிறிது நேரத்துக்குள்ளாக, நண்பகலுக்கு சற்று பின்னதாக, குறித்த வாகனத்தோடு உழவு இயந்திரம் ஒன்று மோதியுள்ளது. வயலில் இருந்து வாகனம் வீதிக்கு ஏறும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், வாகனத்தின் ஒரு பக்கத்தில் உழவு இயந்திரம் இடித்ததாகவும், வாகனத்தின் சில ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
விவசாயத்துக்கு பயன்படுத்தும் கருவி ஒன்று உழவு இயந்திரத்துக்குள் சிக்குண்டதாகவும், அதன் பின்னரே உழவு இயந்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  13 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவரின் நிலை மிக மோசமாக, உயிருக்கு போராடி வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை