தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்திக்கு அவரது சொந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைப்பு

தினகரன்  தினகரன்

டர்பன்: தென்னாப்பிரிக்காவில் மாகாத்மா காந்தியின் சொந்த இடத்தில் அவருக்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தனது இளமை பருவத்தில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் வசித்து வந்தார். தொழில் நிமித்தமாக அங்கு வசித்து வந்த அவர் 1987ம் வருடம் சொந்தமாக அங்கு ஒரு இடத்தை விலைக்கு வாங்கினார். மேலும் அங்கு தான் தனது பொது சந்திப்புகளை மாகாத்மா நடத்தி வந்தார். இதன்பின் இந்தியா வந்த அவர் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார். எனினும் இந்தியா வருவதற்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் தனது சொந்த இடத்தை நேடால் இந்திய காங்கிரசுக்கு கொடுத்து விட்டார். இதனிடையே பல வருடங்களாக நேடால் இந்திய காங்கிரசிடம் இருந்த அந்த இடத்தில் தற்போது  மாகாத்மாவுக்கு ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. மாகாத்மாவின் அரிய பொக்கிஷங்கள் அந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. மகாத்மாவுக்கு அவரது சொந்த இடத்திலேயே அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சமாக அமைந்துள்ளது. இதற்கிடையே சிறப்பு வாய்ந்த இந்த அருங்காட்சியகத்தை தீபாவளியான நேற்று மத்திய அமைச்சர் வி.கே.சிங் திறந்துவைத்தார். இதையடுத்து பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று அருங்காட்சியகத்தை பார்த்து வருகின்றனர்.

மூலக்கதை