இன்று தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்! - தடைப்படும் TER!!

PARIS TAMIL  PARIS TAMIL
இன்று தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!  தடைப்படும் TER!!

CGT தலைமையின் கீழ் இன்று வியாழக்கிழமை பல தொழிற்சங்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. தொழிலாளர் சட்டமூலத்தை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது. 
 
இன்றைய ஆர்ப்பாட்டத்தில் தொடரூந்து தொழிலாளர்களும் ஈடுபடுவதால், நாட்டின் பல பகுதிகளில் இன்று பொது போக்குவரத்துக்கள் தடைப்பட உள்ளன. குறிப்பாக RER சேவைகள் முற்றாக தடைப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 12, 21 மற்றும் ஒக்டோபர் 10 ஆம் திகதி ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து  இன்று 19 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது. Solidaires, FSU, UNEF ஆகிய தொழிற்சங்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதால், மருத்துவமனைகளிலும், பாடசாலை சிற்றுண்டிச் சாலைகளிலும் பல இன்னல்கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேவேளை TGV வழமையான சில தாமதங்களோடு தடை இன்றி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை