மெக்சிகோவில் 22-வது சர்வதேச கோமாளிகள் மாநாடு : ஏராளமானோர் பங்கேற்பு

தினகரன்  தினகரன்

மெக்சிகோ: மெக்சிகோவில் நடைபெற்ற 22-வது சர்வதேச கோமாளிகள் மாநாட்டின் நிறைவு விழா அணி வகுப்பில் கோமாளிகள் வேடமிட்டு ஏராளமானோர் கலந்து கொண்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மெக்சிகோவில் கிங்ஸ் ஆப் லாஃப்டர் என்னும் தலைப்பில் கோமாளிகள் மாநாட்டிற்கு லாட்டின் கிளவுன்ஸ் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. தலைநகர் மெக்சிகோவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பெரு, கோஸ்டாரிகா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து குழந்தைகள், பெரியவர்கள், என ஏராளமானோர் வண்ண உடை அணிந்து பல்வேறு விதமான கோமாளி வேடமணிந்து ஊர்வலமாக சென்று இசைக்கேற்றவாறு நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். சிரிக்க வைப்பது, குழந்தைகளை கவர்வது, பல்வேறு விதங்களில் ஒப்பனை செய்வது குறித்தும் மாயாஜாலத்தை நிகழ்த்துவது குறித்த செயல் விளக்கமும் காட்டப்பட்டது. இம்மாநாட்டில் பங்கேற்றது உற்சாகமளிப்பதாக கோமாளி வேடமிட்டவர்கள் தெரிவித்தனர்.

மூலக்கதை