இந்தியாவுக்கு அமெரிக்காவே நல்ல கூட்டாளி : அமெரிக்க உள்துறை செயலர் டில்லரசன் பேச்சு

தினகரன்  தினகரன்

வாஷிங்க்டன் : இந்தியாவுக்கு உலகளவில் நம்பகமான ஒரு கூட்டாளி தேவை என்றும் அமெரிக்காவே அந்த நம்பகமான கூட்டாளி என்றும் அமெரிக்க உள்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார். நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ரெக்ஸ் டில்லர்சன், சீனா சர்வதேச விதிகளை மதிக்காமல் இருந்து வரும் சூழலில், இந்தியாவும் அமெரிக்காவும் கொளகை ரீதியிலான ஒப்பந்தங்களை விரிவாக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றார்.   சர்வதேச விதிகள் மற்றும் கோட்பாடுகளை இந்தியா மதித்து வருகிறது என்று புகழ் மாலை சூட்டிய டில்லர்சன், தென் சீன கடல் எல்லை மற்றும் தென் சீன தீவு விவகாரத்தில் சீன சரவதேச விதிகளை மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.அத்துடன் தெற்கு ஆசிய அண்டை நாடுகளுடன் நீண்ட கால பிரச்சனைகளை சீனா தொடர்ந்து வருகிறது என்று சாடிய அவர், இந்தியாவுக்கு ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஒரு நம்பகமான கூட்டாளி தேவை என்றார். அவ்வாறான நமபகமான கூட்டாளியாக அமெரிக்காவால் செயல்பட முடியும் என்றும் குறிப்பிட்டார்.

மூலக்கதை