மூன்றாண்டுகளுக்கு பின் ரக்கா நகரை ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து மீட்டது சிரியா

தினகரன்  தினகரன்

ரக்கா:ஐ.எஸ் தீவிரவாதிகளின் முக்கிய நகரமான ரக்காவை அமொிக்கா தலைமையிலான படைகள் மீட்டுள்ளன. 4 மாத போருக்கு பிறகு ஐ.எஸ் தீவிரவாதிகள் வசமிருந்த இந்த முக்கிய நகரம் மீட்கப்பட்டுள்ளது. போர் முடிவடைந்து விட்ட நிலையில் குா்தூ மற்றும் அரபு வீரர்கள் அங்கு கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனா். ஐ.எஸ் தீவிரவாதிகளின் கடைசி புகலிடமும் அழிக்கப்பட்டுவிட்டதாக வாஷிங்டன்னில் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தை சோ்ந்த ஹேதா் நோரட், ஈராக்கில் இருந்து 90 சதவீத ஐ.எஸ் தீவிரவாதிகள் அழிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். சிாியாவிலும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. சிாிய ஜனநாயக படைகளுக்கு அமொிக்கா தொடா்ந்து ஆதரவளித்து வருவதாக குறிப்பிட்டாா். 2014-ல் சிாியாவின் முக்கிய நகரமான ரக்காவை ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினா்.  இதனை மீட்க அமொிக்காவின் தலைமையில் சிாிய ஜனநாயக படைகள் நடத்திய முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. ரக்காவில் இருந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் ஒழிக்கப்பட்டதையடுத்து சிாியாவில் அவா்களின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த வெற்றியை ரக்கா நகர வீதிகளில் அமொிக்க, குா்தூ வீரர்கள் கொடி ஏந்தி கொண்டாடினா். ஈராக்கின் பொிய நகரமான மொசூலில் இருந்தும் தீவிரவாதிகள் முழுவதும் அழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை