வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய அதிபர் டிரம்ப்

தினமலர்  தினமலர்
வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில், தீபாவளி பண்டிகையை நேற்று கொண்டாடினார். அமெரிக்காவில், இந்தாண்டு துவக்கத்தில் நடந்த அதிபர் தேர்லில் வென்று, ஆட்சியை பிடித்த, டொனால்டு டிரம்ப், 71, முதல் முறையாக, வெள்ளை மாளிகையில், தீபாவளிப் பண்டிகையை நேற்று விமரிசையாக கொண்டாடினார். அவருடன், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, அமெரிக்க பிரமுகர்களான, நிக்கி ஹாலே, சீமா வர்மா
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், டொனால்டு டிரம்ப் கூறியுள்ளதாவது:
தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் இந்நாளில், இந்திய மக்களை, ஹிந்து மத நம்பிக்கையின் தாயகமான இந்தியாவை, உலகின் பெரிய ஜனநாயகத்தை உருவாக்கியவர்களை பெருமையுடன் எண்ணிப் பார்ப்போம். பிரதமர் நரேந்திர மோடியுடனான, மிக வலிமையான உறவை, உயர்வாக மதிக்கிறேன். இந்திய அமெரிக்க சமுதாயத்தை சேர்ந்த, அமெரிக்க நிர்வாக அதிகாரிகள், தலைவர்களுடன் சேர்ந்து, தீபாவளி திருநாளை கொண்டாடுவதை, கவுரவமாக கருதுகிறேன்.அமெரிக்கா மற்றும் உலகின் வளர்ச்சிக்கு, இந்திய அமெரிக்கர்கள் பேருதவி புரிந்துள்ளனர்.இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

மூலக்கதை