தமிழகத்தில் மழை குறைய வாய்ப்பு: வானிலை மையம்

தினமலர்  தினமலர்
தமிழகத்தில் மழை குறைய வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: ‛அடுத்து வரும் சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை குறையும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்க கடலில், கடந்த நான்கு நாட்களுக்கு முன் உருவான, காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியது. இது படிப்படியாக, மத்திய வங்க கடலில் இருந்து, வடமேற்கு திசையில் ஒடிசாவை நோக்கி நகர துவங்கி உள்ளது. அதனால், அடுத்து வரும் சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை குறையும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில இடங்களில் வெப்ப சலன மழை, சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை, 8.30 மணி நிலவரப்படி, கடந்த, 24 மணி நேரத்தில், திருவள்ளூர், பூண்டி, வந்தவாசியில், தமிழகத்தில் அதிகபட்சமாக, 5 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னை, நுங்கம்பாக்கத்தில், 2 செ.மீ., மழை பதிவானது.

மூலக்கதை