பிரான்சின் தொலைபேசி இலக்கங்கள் பத்தாகிய நாள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரான்சின் தொலைபேசி இலக்கங்கள் பத்தாகிய நாள்!!

பிரான்சில் நிலையான தொலைபேசிகள் (Fixe - Landline) எட்டு இலக்கங்களுடன் பல காலங்களாக வழக்கத்தில் இருந்து வந்தன. ஆனால் தொலைபேசிப் பாவனையாளர்களின் தொகை மிகவும் அதிகமாகியபோது, பிரான்சின் தொலைபேசிச் சேவைகள் பெரும் திண்டாட்டத்தைச் சந்தித்தன. இதற்குத் தீர்வு காணும் விதமாக, இருபத்தியொரு வருடங்களிற்கு முதல், இதே 18ம் திகதி ஒக்டோபர் மாதம், 1996 ஆம் ஆண்டு, பிரான்சின் தொலைபேசி இலக்கங்கள் எட்டிலிருந்து பத்தாக மாறியது.
 
 
பிரான்சின் மாநிலங்கள் ஐந்தாகப் பிரிக்கப்பட்டு, 01 இலிருந்த 05 வரையாக, வழமையாக தொலைபேசிய இலக்கங்களிற்கு முன்னால் இணைக்கப்பட்டது. உதாரணத்திற்கு இல்-து பிரான்சிற்குள் 48495051 என்று இயங்கி வந்த தொலைபேசி இலக்கமானது, அதற்கு முன்னால் 01 இணைக்கப்பட்டு 0148495051 என மாறியது. இNதுவே இன்றைய பத்த இலக்கத் தொலைபேசி இலக்கத்தின் வரலாறாகும்.
 
 
 
பிரான்சின் அரசாங்கத் தொலைபேசிச் சேவையாக இருந்த FRANCE TELECOM, தனியார் மயப்படுத்தப்பட்டு ORANGE நிறுவனமாக மாற்றமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

மூலக்கதை