அரசியல்வாதிகளை தாக்க திட்டமிட்ட 10 பேர் கைது! - காவல்துறையினர் அதிரடி!!

PARIS TAMIL  PARIS TAMIL
அரசியல்வாதிகளை தாக்க திட்டமிட்ட 10 பேர் கைது!  காவல்துறையினர் அதிரடி!!

நேற்று செவ்வாய்க்கிழமை, அரசியல்வாதிகளை தாக்க திட்டமிட்ட 10 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்கள் 17 தொடக்கம் 25 வயதுடயவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கைது செய்யப்படவர்களில், 9 ஆண்களும், ஒரு பெண்ணும் உள்ளனர். இவர்கள் Jean-Luc Mélenchon மற்றும் Christophe Castaner ஆகிய அரசியல்தலைவர்களை தாக்குவதற்கும், பள்ளிவாசல் ஒன்றை தகர்ப்பதற்கும் திட்டம் தீட்டியிருந்தனர். கைது செய்யப்பட்ட இவர்கள் தற்போது 'பயங்கரவாத நடவடிக்கை'யின் கீழ் விசாரிக்கப்பட்டு வரப்படுகின்றனர். இவர்கள் Marseille நகரிலும் d’Aix-en-Provence மாகாணத்தை சுற்றிலும் பரவலாக கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்பில் இவர்கள் இல்லாத போதும், தாக்குதல் நடத்த திட்டமிட்டது ஏன் என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 
 
 

மூலக்கதை