பெண் பத்திரிகையாளர் படுகொலை

தினமலர்  தினமலர்
பெண் பத்திரிகையாளர் படுகொலை

மால்டா; 'பனாமாகேட்' ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர், கார் குண்டு வெடிப்பில் இறந்தார்.
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் உள்ள, 'மொசாக் பொன்சேகா' சட்ட நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளனர்.
இது தொடர்பான ஆவணங்கள், 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில், சமீபத்தில் வெளியானது.
இந்த விவகாரத்தில் பாக்., முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் சிக்கினர். இதனால், பிரதமர் பதவியிலிருந்து, ஷெரீப் நீக்கப்பட்டார்.
இந்த, 'பனாமாகேட்' ஊழலை அம்பலப்படுத்தியவர், மால்டா நாட்டை சேர்ந்த, பெண் நிருபர், தப்னே கருவானா கலிஜியா, 53. இதனால், அவருக்கு, தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தன. தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக போலீசில், அவர் புகார் செய்து இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், மால்டாவில் உள்ள பிட்னிஜா கிராமத்தில், காரில், கலிஜியா சென்று கொண்டிருந்தார்.
அப்போது, காரில் இருந்த குண்டு வெடித்ததில், கலிஜியா உடல் சிதறி இறந்தார். இந்தத் தாக்குதலுக்கு, எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

மூலக்கதை