அகதிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடாத்த முற்பட்டவர்கள் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
அகதிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடாத்த முற்பட்டவர்கள் கைது!!

17 இல் இருந்து 25 வயதுடைய, தீவிர வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த பத்துப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசியல்வாதிகள் மீதும், பள்ளிவாசால்கள் மீதும் இவர்கள் தாக்குதல் நடாத்த முற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவர்களின் தாக்குதல் திட்டங்களின் முக்கிய குற்றவாளி, கடந்த ஜுன் மாதத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்தக் கைதுகள் நடாத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
 
பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்ட குற்றத்தின் அடிப்படையில், கைது செய்யப்பட்வர்களில் ஒன்பது பேர் ஆண்கள், ஒருவர் பெண். மார்செய் மற்றும் Aix-en-Provence இல் பல பயங்கரவாதம்,  மற்றும் வன்முறைகளை மேற்கொண்ட Action Française Provence அமைப்பின் தலைவர் Logan Alexandre Nisin உடன் இவர்கள் இயங்கி உள்ளனர் என்றும், உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
அகதிகள், அரசியல் பிரமுகர்கள், மற்றும் பள்ளிவாசல்கள் ஆகியவற்றின் மீது இவர்கள் தாக்குதல் நடாத்த முற்பட்ட திட்டத்தின், அனைத்துக் கோப்புகளையும் பயங்கரவாதத் தடைப்பிரிவினர் கைப்பற்றி உள்ளனர்.
 
 

மூலக்கதை