'தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'

தினமலர்  தினமலர்
தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்

ஐதராபாத்: ''தேர்தலில், ஓட்டு போடுவதற்கு, ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்தலாம்,'' என, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர், டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறிஉள்ளார்.

இதுகுறித்து, ஐதராபாத்தில் நேற்று, நிருபர்களிடம், அவர் கூறியதாவது: தேர்தலில் ஓட்டு போட, ஆதார் அட்டையையும், வாக்காளர் அடையாள அட்டையையும், அடையாள ஆவணங்களாக, பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, வாக்காளர் அடையாள அட்டைக்கு பதில், ஆதார் அடையாள அட்டையையே, ஆவணமாக பயன்படுத்தலாம்.

நாடு முழுவதும், எல்லா வாக்காளர்களுக்கும், ஆதார் அடையாள அட்டை அளிக்கப்பட்டிருக்கையில், இன்னொரு அடையாள அட்டை எதற்கு... வாக்காளர் அடையாள அட்டையை ஒழித்து விட்டு, தேர்தலில் ஓட்டு போட, பிரத்யேக ஆவணமாக, ஆதார் அட்டையை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை