மகாராஷ்டிரா கிராம பஞ்., தேர்தல் ; பா.ஜ.,வுக்கு 1311 சீட்

தினமலர்  தினமலர்
மகாராஷ்டிரா கிராம பஞ்., தேர்தல் ; பா.ஜ.,வுக்கு 1311 சீட்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த இரண்டாம் கட்ட கிராம் பஞ்., தேர்தலில் பா.ஜ. 1,311 இடங்களை கைப்பற்றியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த இரண்டாம் கட்ட கிராம பஞ்., தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று ( அக்டோபர் 17) நடந்தது.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பா.ஜ.. 1311 இடங்களையும், காங்., 312 இடங்களையும், தேசிய காங்., கமிட்டி 297 இடங்களையும், சிவசேனா 295 இடங்களையும், மற்ற கட்சியினர் 459 இடங்களையும் கைபற்றியுள்ளனர். இதன் மூலம் இத்தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது.

இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில், மகாராஷ்டிரா இரண்டாம் கட்ட கிராம பஞ்., தேர்தலின் வெற்றி மகத்தானது. பா.ஜ., மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை நம்மை அதிகமாக பணி செய்ய துண்டியுள்ளது. என பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை