2020 அதிபர் தேர்தலில் போட்டியிட தயாரா?: ஹிலாரியை வம்புக்கு இழுக்கிறார் டிரம்ப்

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: அடுத்ததாக 2020ல் நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட தயாரா என்று ஹிலாரி கிளிண்டனை பார்த்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.2016ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்த நேரத்தில் டிரம்ப் எதிர்பாராத வெற்றி பெற்றார். இதுதொடர்பாக ஹிலாரி கூறுகையில்,” எனது தோல்விக்கு வெளியில் இருந்து செயல்பட்ட சில காரணிகள்தான் காரணம். குறிப்பாக நான் தோற்க வேண்டும் என்பதில் ரஷ்யா சில திட்டங்களை வகுத்து செயல்படுத்தி, அதில் வெற்றியும் பெற்றுவிட்டனர்” என்று குறிப்பிட்டார்.இதற்கு அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்து பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் அவர் கூறியதாவது: என்னை எதிர்த்து தேர்தலில் நிறுத்தப்பட்ட ஹிலாரி ஒரு பலவீனமான வேட்பாளர். 2020 அதிபர் தேர்தலிலும் அவர் களத்தில் குதிப்பார் என்று நான் நம்புகிறேன். இது எனது நம்பிக்கை. ஹிலாரி, நீங்கள் தயவுசெய்து மீண்டும் போட்டியிட வேண்டும். அப்போது பார்ப்போம், யார் வெற்றி பெறுகிறார்கள் என்று?.ஹிலாரி அதிபர் தேர்தலில் வெற்றி பெறாமல் போனதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது அவர் செய்த எதுவும் நல்லவை அல்ல. வெற்றிக்கு தேவையான தேர்தல் வாக்குகளை அவர்களால் பெற முடியவில்லை. ஆனால் மக்கள் ஓட்டுகளை பெற்றது பற்றி இப்போது பேசி வருகிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை