எப்போது வேண்டுமானாலும் அணு ஆயுதப் போர் மூளலாம்: ஐ.நா-வில் கருவிய வடகொரியா

விகடன்  விகடன்
எப்போது வேண்டுமானாலும் அணு ஆயுதப் போர் மூளலாம்: ஐ.நாவில் கருவிய வடகொரியா

ஐக்கிய நாடுகள் சபைக்கான வடகொரியாவின் துணைத் தூதர் கிம் இன் யாங், 'எந்தக் கணத்திலும் அணு ஆயுதப் போர் வெடிக்கலாம்' என்று எச்சரிக்கும் தொனியில் தெரிவித்துள்ளார்.

 மேலும், '1970-களுக்குப் பிறகு அமெரிக்காவால் மிகத் தீவிரமான அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நாடு, வடகொரியா மட்டும்தான். ஆகையால், தற்காப்புக்காக அணு ஆயுதங்களை உருவாக்கிக்கொள்ள வடகொரியாவுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. கொரிய தீபகற்பத்தில் பிரச்னை மிகவும் தீவிரமாக இருக்கிறது. எந்தக் கணத்தில் வேண்டுமானாலும்  அணு ஆயுதப் போர் மூள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது' என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் தெரிவித்துள்ளார்.

 'அணு ஆயுதப் போருக்கு வாய்ப்பு இருக்கிறது' என்று ஐ.நா சபையிலேயே இப்படி மிக நேரடியாக வடகொரியா பேசியிருப்பது  உலகம் முழுவதிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுநாள் வரை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையில் வார்த்தைப் போரும், இரு நாடுகளுக்கிடையில் பனிப்போரும் நிலவிவந்தது. அதற்கே உலகத் தலைவர்கள் மிகுந்த கவலைகொண்டிருந்தனர். இப்போது, வடகொரியா தரப்பிலிருந்து 'எந்தக் கணத்திலும் அணு ஆயுதப் போர்' தொடங்கலாம் என்று கூறியிருப்பது நல்ல செய்தியாக இல்லை. 

மூலக்கதை