பெண்கள் மீதான வன்முறை - உடனடி அபராதம்!

PARIS TAMIL  PARIS TAMIL
பெண்கள் மீதான வன்முறை  உடனடி அபராதம்!

பெண்மீதான வீதி அல்லது பொது இடத்தில் வன்முறையில் ஈடுபட்டால், சம்பவ ஒடத்திலேயே அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.
 
நேற்று திங்கட்கிழமை பெண்களுக்கான அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். பெண்கள் மீதான வன்முறை, பாலியல் துன்புறுத்தல், ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களுக்கு இந்த உடனடி குற்றப்பணம் அறவிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், 'இது மிக அவசியமான ஒன்று. காரணம், வீதி பாலியல் துன்புறுத்தல் சட்டம் ஒன்றும் இதுவரை வறையறுக்கப்படவில்லை!' என அவர் மேலும் குறிப்பிட்டார். 
 
பிரபல அமெரிக்க தயாரிப்பாளர் Harvey Weinstein மீது தொடர்ச்சியான பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில், பிரெஞ்சு நடிகை ஒருவரும் இந்த துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேவேளை, சில பெண்ணிய அமைப்பினரும் இந்த முடிவை வரவேற்று ஆதரவு அளித்துள்ளனர். அவர்களிடம் தும்புறுத்தலுக்கும் கேலி கிண்டல்களுக்குமான வேறுபாடு பற்றி கேட்டபோது, 'எங்களுக்கு இரண்டுக்குமான வித்தியாசம் நன்றாக தெரியும்.  முன்னையது மட்டும் தான் குற்றம். எந்த இடத்தில் எது துன்புறுத்தலாக மாறுகிறது என்பதை நாங்கள் நன்கு அறிவோம்!' என அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

மூலக்கதை