விளையாடும்போது ஏற்பட்ட காயத்தால் பிரபல கால்பந்து ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
விளையாடும்போது ஏற்பட்ட காயத்தால் பிரபல கால்பந்து ...

பிரபல கால்பந்து வீரர் சொய்ருல் குடா போட்டியின்போது ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் பிரபல கால்பந்து வீரர் சொய்ருல் குடா. லமான்கான் கிளப் சார்பாக 500க்கும் மேற்பட்ட போட்டிகளில் கோல்கீப்பராக விளையாடியுள்ளார்.

கிளப் சார்பாக நேற்று நடைபெற்ற போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர் அணியின் பந்தை தடுக்க முயன்ற போது பிரேசில் வீரரான ரமன் ராட்ரிகஸ் உடன் பயங்கரமாக மோதி கீழே விழுந்தார். இதில் அவரது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு உடனடியாக மரணம் அடைந்தார்.

இந்த சம்பவம் அந்த நாட்டின் கால்பந்து ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை