உலகின் மோசமான தாக்குதல்: சோமாலியாவில் 276 பேர் ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
உலகின் மோசமான தாக்குதல்: சோமாலியாவில் 276 பேர் ...

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிசுவில் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன. இதில் சுமார் 276 பலியாகியுள்ளனர்.


    மொகதிஷுவின் பிரதான பகுதியில் வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் உள்ள ஹோட்டல் வாசலில், வெடிபொருட்களோடு வந்த லாரி வெடித்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.  
  இந்த தாக்குதலில் 276 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 300 பேர் காயம் அடைந்துள்ளனர்.

காயம் அடைந்த பலர் கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  அல்-ஷபாப் குழு 2007 ஆம் ஆண்டு கிளர்ச்சியை தொடங்கியதில் இருந்து, ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

.

மூலக்கதை