’ஜிஎஸ்டி விவகாரத்தில் காங்கிரஸூம் கூட்டாளிதான்’: பிரதமர் மோடி தாக்கு

விகடன்  விகடன்
’ஜிஎஸ்டி விவகாரத்தில் காங்கிரஸூம் கூட்டாளிதான்’: பிரதமர் மோடி தாக்கு

சரக்கு மற்றும் சேவை வரிகள் குறித்த பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதில் காங்கிரஸ் கட்சியும் முக்கிய பங்கு வகித்ததாக பிரதமர் மோடி பேசினார். 


குஜராத் மாநிலம் காந்திநகரில் கௌரவ் மகா சம்மேளன் என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, குஜராத் முன்னாள் முதலமைச்சர் ஆனந்தி பென் படேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். அப்போது பேசிய பிரதமர் மோடி, `குஜராத் மற்றும் குஜராத் மக்களை நேரு மற்றும் காந்தி குடும்பத்தினர் வெறுப்பார்கள். அந்தக் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில், குஜராத் எப்போதுமே முள் போன்றதே. அவர்கள் சர்தார் வல்லபாய் பட்டேலையும் அவர் மகளையும் என்ன செய்தார்கள் என்பதை வரலாறு அறியும். மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, அவரை அழிக்க காங்கிரஸ் கட்சியினர் நினைத்தார்கள். மதவாதம், சாதியவாதம் பேசி மக்களுக்குத் தவறான தகவல்களை அளித்தே காங்கிரஸ் கட்சித் தேர்தலைச் சந்திக்கிறது. ஜிஎஸ்டி தொடர்பான முடிவுகளை எடுப்பதில் காங்கிரஸ் கட்சியும் முக்கியப் பங்கு வகித்தது. எனவே, ஜிஎஸ்டி வரி குறித்த பொய்களை அவர்கள் பரப்பக் கூடாது. வளர்ச்சியை மட்டுமே முன்வைத்து தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாரா’' என்றார்.

மூலக்கதை