கால்பந்து போட்டியில் இரண்டு கோல்கள் அடித்த டோனி!

விகடன்  விகடன்
கால்பந்து போட்டியில் இரண்டு கோல்கள் அடித்த டோனி!

மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்களும் கிரிக்கெட் நட்சத்திரங்களும் இடையிலான கால்பந்துப் போட்டியில் இரண்டு கோல்கள் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்று அசத்தி இருக்கிறார் மகேந்திர சிங் டோனி. 

நடிகர் அபிஷேக் பச்சனின் தொண்டு நிறுவனத்துக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் தொண்டு நிறுவனத்துக்கும் பணம் திரட்டுவதற்காக இந்த சிறப்பு கால்பந்து போட்டியை நடத்திருக்கிறார்கள். இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஒரு அணியாகவும், கிரிக்கெட் நட்சத்திரங்கள் மற்றொரு அணியும் கலந்துகொண்டு சிறப்பு கால்பந்து போட்டியாக விளையாடி இருக்கிறார்கள். 

இந்தப் போட்டியில் டோனி சிறப்பாக விளையாடியும், இரண்டு கோல்கள் அடித்தும் கிரிக்கெட் நட்சத்திர அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார். போட்டி தொடங்கி ஐந்தாவது நிமிடத்தில் முதல் கோலை அடித்த டோனி, 39-வது நிமிடத்தில் ஃபிரி ஹிட் மூலம் இரண்டாவது கோலை அடித்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.

போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டு கோல் அடித்ததற்காக ஆட்ட நாயகன் விருதைப் பெற்று அசத்தி இருக்கிறார் டோனி. இவர் கோல் அடித்த காணொளி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மூலக்கதை