மருந்து நிறுவனங்கள் இடர்களை மீறி லாபமீட்டும்

தினமலர்  தினமலர்
மருந்து நிறுவனங்கள் இடர்களை மீறி லாபமீட்டும்

மும்பை : இந்­திய மருந்து நிறு­வ­னங்­கள்,பல தடை­க­ளுக்கு இடை­யி­லும், ஜூன் – செப்., வரை­யி­லான, இரண்­டா­வது காலாண்­டில், சிறப்­பான வளர்ச்சி கண்­டி­ருக்­கும் என, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.இது குறித்து, எச்.டி.எப்.சி., செக்­யூ­ரிட்­டீஸ் நிறு­வ­னத்­தின் ஆய்­வா­ளர், அமெய் சால்கி கூறி­ய­தா­வது:இந்­தாண்டு, ஜன., – ஜூன் வரை, மருந்து நிறு­வ­னங்­களின் செயல்­பாடு மந்­த­மாக இருந்­தது. ஆனால், ஜூலை –செப்., வரை­யி­லான, நடப்பு நிதி­யாண்­டின் இரண்­டா­வது காலாண்­டில், நன்­றாக இருந்­தது.இதற்கு, ஜி.எஸ்.டி., அம­லுக்கு பின், மருந்து கடை­கள் மீண்­டும் அதி­க­ள­வில், மருந்­து­களை கொள்­மு­தல் செய்­த­தும், சில நிறு­வ­னங்­கள், அமெ­ரிக்க சந்­தை­யில் புதிய மருந்­து­களை வெளி­யிட்­ட­தும், முக்­கிய கார­ணங்­க­ளா­கும். இத­னால், ஜூலை – செப்., காலாண்­டில், மருந்து நிறு­வ­னங்­களின் வரு­வாய், முதல் காலாண்டை விட, 15 சத­வீ­தம் அதி­க­ரித்­தி­ருக்­கும்; மொத்த லாபம், 18லிருந்து, 22 சத­வீ­த­மாக உயர்ந்­து இருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.அதே சம­யம், சன் பார்மா நிறு­வ­னத்­தின் விற்­று­மு­தல், 15 சத­வீ­தம் குறை­யும் என, தெரி­கிறது.இதன் துணை நிறு­வ­ன­மான, டாரோ­வில் ஏற்­பட்­டுள்ள சரிவு, மூல மருந்­து­களின் அறி­மு­கம் குறைந்­தது போன்­றவை, இதற்கு கார­ணம் என்­றா­லும், மொத்த லாபம், முந்­தைய காலாண்டை விட, அதி­க­மி­ருக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.டாக்­டர் ரெட்­டீஸ் லேப்., நிறு­வ­னத்­தின் லாபத்­திற்கு, ‘ஜிகோ­பக்­ஸோன், ஜிநு­வ­ரிங்’ போன்ற, புதிய மருந்­து­களின் அறி­மு­கம் கைகொ­டுக்­கும்.சிப்லா நிறு­வ­னத்­தின் விற்­று­மு­தல், 7 சத­வீ­தம் வளர்ச்சி கண்­டி­ருக்­கும்.லுாபின் நிறு­வ­னத்­தின், மருந்து விற்­பனை மீண்­டும் உயர்ந்­துள்­ள­தால், வரு­வாய், 4 சத­வீ­தம் வளர்ச்சி அடைந்­தி­ருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

மூலக்கதை