தொலை தொடர்பு சேவை துறையில் ஓராண்டுக்கு கடும் போட்டி நிலவும்

தினமலர்  தினமலர்
தொலை தொடர்பு சேவை துறையில் ஓராண்டுக்கு கடும் போட்டி நிலவும்

புதுடில்லி : ‘இந்­திய தொலை தொடர்பு சேவை துறை­யில், அடுத்த, 12 -– 18 மாதங்­க­ளுக்கு போட்டி கடு­மை­யாக இருக்­கும்’ என, சர்­வ­தேச தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘மூடிஸ்’ தெரி­வித்­துள்­ளது.இது குறித்து, இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:இந்­தி­யா­வில், மொபைல் போன் நிறு­வ­னங்­கள், ஒன்­று­டன் ஒன்று இணைந்து வரு­கின்றன. இத­னால், முன்­னணி நிறு­வ­னங்­கள் இடை­யி­லான போட்டி அதி­க­ரித்­துள்­ளது. பார்தி ஏர்­டெல், வோட­போன், ரிலை­யன்ஸ் ஜியோ இன்­போ­காம் வோட­போன் இந்­தியா ஆகிய நிறு­வ­னங்­கள், அவற்­றின் வர்த்­த­கத்தை பாது­காத்­துக் கொள்­வ­து­டன், சந்தை பங்கை அதி­க­ரிக்­க­வும், கடு­மை­யாக போரா­டும்.பார்தி ஏர்­டெல் நிறு­வ­னம், டாடா டெலி­சர்­வீ­சஸ் நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்தி உள்­ளது. ரொக்­க­மில்­லா­மல், அகண்ட அலை­வ­ரிசை உரி­மத் தொகை­யில், சிறிய பங்­க­ளிப்பை மட்­டுமே வழங்­கி­ய­தன் மூலம், பார்தி ஏர்­டெல், நான்கு கோடி சந்­தா­தா­ரர்­களை கூடு­த­லாக பெற்­றுள்­ளது.வோட­போன் நிறு­வ­னம், ஐடியா செல்­லு­லார் நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்தி, சந்தை பங்­க­ளிப்பை விரி­வாக்­கும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ளது. ஆர்­ஜி­யோ­வும் கவர்ச்­சி­யான சலு­கை­கள் மூலம், வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்த்து வரு­கிறது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை