அமெரிக்காவில் துரித உணவு ஆலை எல்.டி., புட்ஸ் நிறுவனம் அமைத்தது

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் துரித உணவு ஆலை எல்.டி., புட்ஸ் நிறுவனம் அமைத்தது

புதுடில்லி : அமெ­ரிக்­கா­வில், பாஸ்­மதி அரிசி விற்­ப­னை­யில், முன்­ன­ணி­யில் உள்ள, எல்.டி., புட்ஸ் நிறு­வ­னம், அங்கு, துரித உணவு தொழிற்­சா­லையை அமைத்­துள்­ளது.இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் தலைமை செயல் அதி­காரி, அஸ்­வனி அரோரா கூறி­ய­தா­வது:நிறு­வ­னத்­தின், ‘ராயல்’ பிராண்டு பாஸ்­மதி அரிசி மூலம், ஏற்­க­னவே, அமெ­ரிக்­கா­வில், வலு­வான நிலை­யில் உள்­ளோம். இதை­ய­டுத்து, இயற்கை முறை­யில் உற்­பத்­தி­யா­கும் பாஸ்­மதி அரி­சியை, ‘எக்கோ லைப்’ பிராண்­டில், துரித உண­வாக அறி­மு­கப்­ப­டுத்த உள்­ளோம். இதற்­காக, 50 லட்­சம் டாலர் முத­லீட்­டில், அமைக்­கப்­பட்­டுள்ள தொழிற்­சா­லை­யில், டிச., முதல், வணிக ரீதி­யி­லான உற்­பத்தி துவங்­கும். தொழிற்­சா­லைக்கு தேவை­யான அனைத்து பொருட்­களும், இந்­தி­யா­வில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.அமெ­ரிக்­கா­வில், எல்.டி., புட்ஸ் நிறு­வ­னத்­தின், ‘ராயல்’ பிராண்டு பாஸ்­மதி அரிசி, அமெ­ரிக்க சந்­தை­யில், 40 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மான பங்கை கொண்­டுள்­ளது. இந்­நி­று­வ­னத்­தின் விற்­று­மு­தல், கடந்த நிதி­யாண்­டில், 3,330 கோடி ரூபா­யாக உள்­ளது.

மூலக்கதை