மின்னணு பணப்பை சேவையில் களமிறங்கும், ‘ஆப்பிள்’ நிறுவனம்

தினமலர்  தினமலர்
மின்னணு பணப்பை சேவையில் களமிறங்கும், ‘ஆப்பிள்’ நிறுவனம்

ஐதராபாத் : ‘ஆப்­பிள்’ நிறு­வ­னம், ‘இ –வாலட்’ எனப்­படும், மின்­னணுபணப்பை சேவை­யில் கள­மி­றங்க திட்­ட­மிட்டு உள்­ளது.இது குறித்து, ஆப்­பிள் நிறு­வ­னத்­தின், இணைய சாப்ட்­வேர் மற்­றும் சேவை­கள் பிரி­வின் மூத்த துணைத் தலை­வர், எடி க்யூ கூறி­ய­தா­வது:இந்­தி­யா­வில், மின்­னணு பணப் பரி­வர்த்­தனை சேவை­யில் கள­மி­றங்க, ஆப்­பிள் திட்­ட­மிட்டு உள்­ளது. இச்­சேவை, ‘ஆப்­பிள் பே’ என்ற பிராண்டு பெய­ரில் வழங்­கப்­படும். இந்­தியா போன்ற, மிகப்­பெ­ரிய வர்த்­தக வாய்ப்பு உள்ள, மின்­னணு பணப்பை சேவை சந்­தை­யில் கள­மி­றங்க, ஆப்­பிள் ஆர்­வ­மாக உள்­ளது. எனி­னும், இச்­சே­வைக்­கான அடிப்­படை கட்­ட­மைப்பை உரு­வாக்­கு­வதை தவிர்த்து, ஏற்­க­னவே, இத்­து­றை­யில் உள்ள நிறு­வ­னத்­து­டன் இணைந்து செயல்­பட, ஆப்­பிள் விரும்­பு­கிறது. குறிப்­பாக, இத்­து­றை­யில் முன்­ன­ணி­யில் உள்ள, ‘பேடி­எம்’ போன்ற நிறு­வ­னங்­க­ளு­டன், ஆப்­பிள் இணைந்து செயல்­படும்.இவ்­வாறு அவர் கூறி­னார் .ஆப்­பிள் நிறு­வ­னம், பெங்­க­ளூ­ரில், ‘ஐபோன் எஸ்.இ.,’ சாத­னங்­களை, ஏற்­க­னவே, தயா­ரிக்­கத் துவங்கி உள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

மூலக்கதை