கடந்த செப்டம்பர் மாதத்தில்... உணவு பொருட்கள் விலை குறைவால் மொத்த விலை பணவீக்கம் சரிந்தது

தினமலர்  தினமலர்
கடந்த செப்டம்பர் மாதத்தில்... உணவு பொருட்கள் விலை குறைவால் மொத்த விலை பணவீக்கம் சரிந்தது

புதுடில்லி, : செப்­டம்­ப­ரில், காய்­க­றி­கள் உள்­ளிட்ட, உண­வுப் பொருட்­கள் விலை குறைந்­த­தால், மொத்த விலை பண­வீக்­கம் சரி­வ­டைந்து உள்­ளது.இது குறித்து, மத்­தியவர்த்தக அமைச்சகம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:மொத்த விற்­பனை விலை அடிப்­ப­டை­யி­லான பண­வீக்­கம், செப்­டம்­ப­ரில், 2.6 சத­வீ­த­மாக சரி­வ­டைந்து உள்­ளது; இது, ஆகஸ்­டில், முந்­தைய நான்கு மாதங்­களில் இல்­லாத வகை­யில், 3.24 சத­வீ­த­மாக உயர்ந்து இருந்­தது. அதே சம­யம், 2016 செப்­டம்­ப­ரில், மொத்த விலை பண­வீக்­கம், 1.36 சத­வீ­த­மாக இருந்­தது.செப்­டம்­ப­ரில், உண­வுப் பொருட்­கள் பண­வீக்­கம், 2.04 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது; இது, ஆகஸ்­டில், 5.75 சத­வீ­த­மாக இருந்­தது. இதே காலத்­தில், காய்­க­றி­கள் பண­வீக்­கம், 44.91லிருந்து, 15.48 சத­வீ­த­மாக சரி­வ­டைந்து உள்­ளது.உண­வுப் பொருட்­கள் பண­வீக்­கம் குறைந்­துள்ள போதி­லும், வெங்­கா­யம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்­ததை அடுத்து, அதன் பண­வீக்­கம், 79.78 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. அது போல, முட்டை, மாமி­சம், மீன் ஆகி­ய­வற்­றின் பண­வீக்­கம், 5.47 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. தயா­ரிப்பு பொருட்­கள் பண­வீக்­கம், செப்­டம்­ப­ரில், 2.72 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது; இது, ஆகஸ்­டில், 2.45 சத­வீ­த­மாக இருந்­தது.இதே காலத்­தில், எரி­பொ­ருள் மற்­றும் மின்­சார பண­வீக்­கம், 9.99லிருந்து, 9.01 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. கச்சா எண்­ணெய் விலை அதி­க­ரிப்­பால், பெட்­ரோல், டீசல் விலை, தொடர்ந்து இரு மாதங்­க­ளாக உயர்ந்­தது. இத­னால், மதிப்­பீட்டு மாதத்­தில்,எரி­பொ­ருள் பண­வீக்­கம் அதி­க­ரித்­துள்­ளது.உள்­நாட்­டில், மின் உற்­பத்தி குறைந்­த­தால், மின்­சார பண­வீக்­கம் உயர்ந்­துள்­ளது. பருப்பு வகை­கள் விலை தொடர்ந்து குறைந்து வந்­த­தால், அவற்­றுக்­கான பண­வீக்­கம், 24.26 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. அது போல, உரு­ளைக்­கி­ழங்கு, கோதுமை ஆகி­ய­வற்­றின் பண­வீக்­கம், முறையே, 46.52 சத­வீ­தம் மற்­றும் 1.71 சத­வீ­த­மாக குறைந்­துள்ளன.ஜூலை மாதத்­திற்­கான, மொத்த விலை பண­வீக்­கம், 1.88 சத­வீ­த­மாக, மாற்­ற­மின்றி உள்­ளது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
‘ரெப்போ’ வட்டி குறைக்கப்படுமா?காய்­க­றி­கள், உணவு தானி­யங்­கள் விலை குறைந்­த­தால், செப்­டம்­ப­ரில், சில்­லரை பண­வீக்­கம், 3.28 சத­வீ­த­மாக, மாற்­ற­மின்றி காணப்­பட்­டது.கடந்த வாரம், அரசு வெளி­யிட்ட புள்ளி விப­ரப்­படி, ஆகஸ்­டில், தொழில் துறை உற்­பத்தி, ஒன்­பது மாதங்­களில் இல்­லாத வகை­யில், 4.3 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது.தற்­போது, செப்­டம்­ப­ரில், மொத்த விலை பண­வீக்­க­மும் குறைந்­துள்­ள­தாக, அதி­கா­ர­பூர்வ தக­வல் வெளி­யாகி உள்­ளது.ரிசர்வ் வங்­கி­யின் நிதிக் கொள்கை குழு, 2ம் தேதி வெளி­யிட்ட அறிக்­கை­யில், ‘வங்­கி­க­ளுக்கு வழங்­கும், குறு­கிய கால கட­னுக்­கான, ‘ரெப்போ’ வட்டி விகி­தம், மாற்­ற­மின்றி, 6 சத­வீ­த­மா­கவே நீடிக்­கும்’ என, தெரி­விக்­கப்­பட்டு இருந்­தது.அதன்­பின், தொழில் துறை உற்­பத்தி, மொத்த விலை பண­வீக்­கம் ஆகி­ய­வற்­றின் வளர்ச்சி விப­ரங்­கள் வெளி­யாகி உள்­ள­தால், டிசம்­ப­ரில், ‘ரெப்போ’ வட்டி விகி­தங்­களை, ரிசர்வ் வங்கி குறைக்­குமா என்ற எதிர்­பார்ப்பு எழுந்­துள்­ளது.

மூலக்கதை