Franconville நிலையத்தில் கத்திக் குத்து தாக்குதல்! - தடைப்பட்ட RER C!!

PARIS TAMIL  PARIS TAMIL
Franconville நிலையத்தில் கத்திக் குத்து தாக்குதல்!  தடைப்பட்ட RER C!!

இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் இளம் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். Franconville நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
Val-d'Oise இன் Franconville-Le Plessis Bouchard  நிலையத்தில் இன்று திங்கட்கிழமை காலை 7.46 அளவில், RER C தொடரூந்துள் ஒரு குழு மோதல் ஏற்பட்டது. இளைஞர்கள் பலர் சேர்ந்து ஒருவரைருவர் தாக்கியுள்ளனர். இதன் போது கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் அடித்துக்கொண்டதால், இளைஞன் ஒருவருக்கு வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் குழு மோதினால் பயணிகளுக்கிடையே பெரும் பதட்டம் ஏற்பட்டு, உடனடியாக காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது. 
 
பின்னர் தொடரூந்து நிலையத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, மோதல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தாக்குதலுக்கு இலக்கான நபர் உடனடியாக SAMU இல் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளார். இந்த குழப்பத்தினால் RER C மற்றும் H வழி சேவைகள் சிலமணி நேர தாமதத்துக்குள்ளானது.

மூலக்கதை