ஐ.எஸ்., பயங்கரவாத தலைவன் பிலிப்பைன்சில் சுட்டு கொலை

தினமலர்  தினமலர்
ஐ.எஸ்., பயங்கரவாத தலைவன் பிலிப்பைன்சில் சுட்டு கொலை

மணிலா: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன், இஸ்னிலோன் ஹப்பிலோன், 51, பிலிப்பைன்சில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டான். ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, ஈராக் - சிரியா நாடுகளின் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. அதன் வசமிருந்த பெரும்பாலான பகுதிளை, ஈராக், சிரியா படைகள் மீட்டுள்ளன.

அழிக்கும் பணி : இந்த அமைப்பின், தென் கிழக்கு ஆசிய பிரிவு தலைவனாக, இஸ்னிலோன் ஹப்பிலோன் செயல்பட்டு வந்தான்.தென்கிழக்கு ஆசிய நாடான, பிலிப்பைன்சில், பிலிப்பைன்ஸ் சிட்டி, ஐ.எஸ்., ஆதிக்கத்தில் இருந்து வந்தது. சிரியா, ஈராக்கில் பின்னடைவை ஏற்பட்டதை அடுத்து, பிலிப்பைன்சில், தங்கள் ஆதிக்கத்தை வலிமைப்படுத்த, ஹப்பிலோன் தீவிரம் காட்டி வந்தான்.இதையடுத்து, ஐ.எஸ்., பயங்கரவாதிகளை அழிக்கும் பணியில், பிலிப்பைன்ஸ் ராணுவம், நான்கு மாதங்களாக ஈடுபட்டு வந்தது. இந்த சண்டையில், இதுவரை, 1,000 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பிலிப்பைன்ஸ் சிட்டியை மீட்கும் நோக்கில், பிலிப்பைன்ஸ் ராணுவம், நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது.

ரூ.30 கோடி : இந்த தாக்குதலில், இஸ்னிலோன் ஹப்பிலோனும், அவன் கூட்டாளி, ஒமர் மாவ்ட்டும் கொல்லப்பட்டனர். பிலிப்பைன்சில், 2001ல், மூன்று அமெரிக்கர்கள் கடத்தப்பட்டனர்; அவர்களில் இருவர், பின், கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில், ஹப்பிலோனுக்கு தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. ஹப்பிலோனை பிடிக்க தகவல் தருவோருக்கு, 30 கோடி ரூபாய் பரிசு அளிப்பதாக, அமெரிக்கா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை