தங்கம் விலை மாலைநிலவரம் : சவரனுக்கு ரூ.80 சரிவு

தினமலர்  தினமலர்
தங்கம் விலை மாலைநிலவரம் : சவரனுக்கு ரூ.80 சரிவு

சென்னை : தங்கம் விலை இன்று(அக்., 16-ம் தேதி) சவரனுக்கு ரூ.128 சரிந்துள்ளது.

சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,850-க்கும், சவரனுக்கு ரூ.80 சரிந்து ரூ.22,800-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.30,480-க்கும் விற்பனையாகிறது.

அதேசமயம், வெள்ளியின் விலை சிறிது உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.43.50-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.40,670-க்கும் விற்பனையாகிறது.

மூலக்கதை