சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பை மாற்றுகிறார் அஜித்

தினமலர்  தினமலர்
சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பை மாற்றுகிறார் அஜித்

சிறுத்தை படத்தை கார்த்தியை வைத்து இயக்கிய சிவா, அதையடுத்து வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ச்சியாக அஜித் நடித்த மூன்று படங்களை இயக்கினார். இந்த மூன்று படங்களில் கடைசியாக இயக்கிய விவேகம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது என்றாலும் அஜித் ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடினார்கள். மேலும், இந்த மூன்று படங்கள் மட்டுமின்றி கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்த என்னை அறிந்தால் படத்திலும் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பிலேயே நடித்தார் அஜீத்.

இந்த நிலையில், அடுத்தபடியாக தான் நடிக்கும் புதிய படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பை மாற்றப்போகிறாராம் அஜித். அதுமட்டுமின்றி, அஜீத்தின் புதிய படத்தையும் சிறுத்தை சிவாவே இயக்குகிறார் என்று செய்திகள் வெளியாகி வந்தபோதிலும், அஜித்தின் அடுத்த படத்தை வேறு இயக்குனர் இயக்குவதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சிறு இடைவெளி கொடுத்து விட்டு மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மூலக்கதை