சந்தானத்துக்கு சிம்பு எழுதிய பஞ்ச் டயலாக்!

தினமலர்  தினமலர்
சந்தானத்துக்கு சிம்பு எழுதிய பஞ்ச் டயலாக்!

லொள்ளு சபாவில் இருந்த சந்தானத்தை சினிமாவுக்கு கொண்டு வந்தவர் சிம்பு. அதையடுத்து சினிமாவில் வேகமாக வளர்ந்த சந்தானம், தற்போது ஹீரோவாக அடுத்த லெவலுக்கு சென்றிருக்கிறார். குறிப்பாக, தன்னை ஒரு முழுமையான கதாநாயகனாக தயார்படுத்திக்கொண்டு நடித்து வரும் சந்தானம் சண்டை, பாடல் காட்சிகளில் நடித்திருப்பதைப்பார்த்து சக நடிகர் - நடிகைகளே ஆச்சர்யப்பட்டுக்கொண்டிக்கிறார்கள்.

இந்தநிலையில், தனது காட்பாதரான சிம்புவை தான் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்துள்ளார் சந்தானம். அதோடு, இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், அனிருத் என ஐந்து இசையமைப்பாளர்கள் பின்னணி பாடியிருக்கிறார்கள்.

மேலும், எப்போதுமே தான் நடிக்கும் படங்களில் தனக்கான பஞ்ச் டயலாக்குகளை தானே ரெடி பண்ணிக்கொண்டு பேசும் சிம்பு, இந்த படத்தில் சந்தானத்துக்கு சில பஞ்ச் டயலாக்குகளை எழுதிக் கொடுத்திருக்கிறார். அந்த வசனங்களை சிம்பு பாணியிலேயே பேசி நடித்திருக்கிறாராம் சந்தானம்.

அதேப்போல், சிவாஜி படத்தில் ரஜினியைப் பார்த்து இப்படி சிங்கிளா வந்து மாட்டிக்கிட்டியே என்று ஒருவர் கேட்பார். அதற்கு கண்ணா, பன்னிங்கதான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்று சொல்வார் ரஜினி. அதேபோன்று இந்த சக்க போடு போடு ராஜா படத்திலும் ஒருவர், சந்தானத்தைப்பார்த்து இப்படி சிங்கிளா வந்து மாட்டிக்கிட்டியே என்பாராம்.
அதைக்கேட்டு செம டென்சனாகும் சந்தானம், அந்த நபரை அடித்து துவைத்து விட்டு, பஞ்ச் டயலாக் பேசிவிட்டு அடிப்பது மற்றவங்க பாணி, ஆனா பஞ்ச் டயலாக் பேசுறவனையே அடிப்பது என்னோட பாணி என்று சொல்வாராம் சந்தானம்.

மூலக்கதை