திலீப்பின் வழக்கு விபரம் கேட்கும் பிரதமரின் அலுவலகம்..?

தினமலர்  தினமலர்
திலீப்பின் வழக்கு விபரம் கேட்கும் பிரதமரின் அலுவலகம்..?

கேரளாவில் நடிகை பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் சிக்கி, கிட்டத்தட்ட 85 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நிலையில் ஜாமீனில் வெளிவந்துள்ளார் நடிகர் திலீப். அவர் சிறையில் இருந்து விடுதலையாகும் முன்பே அவர் நடித்த ராம்லீலா படம் ரிலீஸாகி சூப்பர்ஹிட்டாகவும் ஆனது. தற்போதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.. இதனால் திலீப்பிற்கான ஆதரவு அதிகமாகி வருவதாகவே சொல்லப்படுகிறது. இந்தநிலையில் குற்றமற்ற திலீப் இத்தனைநாள் சிறையில் இருக்கவேண்டிய அவசியம் என்ன என சிலர் திலீப்புக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அதில் மலையாள திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த சேர்ந்த சலீம் என்பவர் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் திலீப் இத்தனைநாள் சிறைவாசம் அனுபவித்தது அநீதியான ஒன்று என குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து இந்த வழக்கு குறித்த விசாரணையை தலைமை செயலர் மேற்கொண்டு, அதுகுறித்த தகவல் அனுப்பும்படி பிரதமர் அலுவலகத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.. இந்த புதிய உத்தரவு வழக்கின் திசையை எந்தவிதமாக மாற்றும் என்பது இனி போகப்போகத்தான் தெரியும்.

மூலக்கதை