சுதந்திர போராட்ட வீரராக நடிக்கும் நிவின்பாலி

தினமலர்  தினமலர்
சுதந்திர போராட்ட வீரராக நடிக்கும் நிவின்பாலி

1991ல் மலையாளத்தில் வெளியாகி சுமார் 417 நாட்கள் ஓடி சாதனை படைத்த படம் 'காட்பாதர்'.. முகேஷ், கனகா, திலகன் மற்றும் பலர் நடித்திருந்த இந்தப்படத்தை பிரபல இரட்டை இயக்குனர்களான சித்திக்-லால் இருவரும் இணைந்து இயக்கியிருந்தார்கள்..

இதில் முகேஷ் தான் ஹீரோ என்றாலும் இந்தப்படத்தில் காட்பாதர் கேரக்டரில் பெரியவராக நடித்திருந்த மறைந்த என்.என்.பிள்ளை என்பவர் ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் தனது சிறப்பான நடிப்பால் கவர்ந்தார்.. இவர் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட் மட்டுமல்ல, சுதந்திர போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசியப்படையில் பணியாற்றியவரும் கூட..

இவரது வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாகிறது.. சில நாட்களுக்கு முன்பு 'கம்மட்டிப்பாடம்' இயக்குனர் ராஜீவ் ரவி நிவின்பாலியை வைத்து புதிய படம் இயக்குவதாக ஒரு அறிவிப்பு வெளியானதே.. அது இந்தப்படம் தான். இதில் என்.என்.பிள்ளை கேரக்டரில் தான் நிவின்பாலி நடிக்கவுள்ளார்.

இந்த என்.என்.பிள்ளையின் மகன் தான் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகருமான விஜயராகவன்.. இவர் தமிழில் அரங்கேற்ற வேளை மற்றும் விஜய்யின் 'பைரவா' படங்களில் நடித்துள்ளார். தனது தந்தையின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுவதிலும், அதில் நிவின்பாலி நடிப்பதிலும் தான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக கூறியுள்ளார் விஜயராகவன்.

மூலக்கதை