ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.64.68

தினமலர்  தினமலர்
ரூபாயின் மதிப்பும் உயர்வு  ரூ.64.68

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருப்பது போன்று ரூபாயின் மதிப்பும் அதிக உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.64.68-ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம், வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அதிகளவில் டாலரை விற்பனை செய்து வருவது போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.64.93-ஆக இருந்தது.

மூலக்கதை