மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு நவ. 3க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்: இந்திய அரசுக்கு இங்கிலாந்து கோர்ட் உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு நவ. 3க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்: இந்திய அரசுக்கு இங்கிலாந்து கோர்ட் உத்தரவு

லண்டன்: விஜய்மல்லையாவை நாடு கடத்தக் கோரி இந்திய அரசு ெதாடர்ந்த வழக்கில் நவம்பர் 3ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய இங்கிலாந்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்திய தொழில் அதிபர் விஜய்மல்லையா, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயாில் பல வங்கிகளில் ரூ.

9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கினார். இதனை கிங் பிஷர் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் பல்வேறு போலி நிறுவனங்கள் பெயரில் வெளிநாடுகளில் டெபாசிட் செய்தார்.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் திவாலானதை தொடர்ந்து வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. அவரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

மல்லையா  இங்கிலாந்து தப்பினார். அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.



இதை தொடர்ந்து இங்கிலாந்திலிருந்து அவரை நாடு கடத்த டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் இந்திய அரசு கோரிக்கை வைத்தது. கடந்த ஏப்ரல் 18ம் தேதி இங்கிலாந்து போலீஸ் அவரை கைது செய்து லண்டன் கோர்ட்டில் ஆஜர் படுத்தியது.

அன்றைய தினமே அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது. இது தொடர்பாக விஜய்மல்லையா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.   இதற்கு பதில் மனு தாக்கல் இந்திய அரசுக்கு நவம்பர் 3ம் தேதி வரை கோர்ட் கெடு வைத்துள்ளது.

இதை தொடர்ந்து டிசம்பர் 4ம் தேதி இந்த வழக்கில் விசாரணை தொடங்கும். அதன் பின்னரே விஜய்மல்லையாவை இங்கிலாந்து அரசு நாடு கடத்துமா என்பது தெரியவரும்.


.

மூலக்கதை