கலிபோர்னியாவில் பயங்கரம் காட்டுத் தீயில் சிக்கி 29 பேர் பரிதாப பலி : 1.75 லட்சம் மக்கள் வெளியேற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கலிபோர்னியாவில் பயங்கரம் காட்டுத் தீயில் சிக்கி 29 பேர் பரிதாப பலி : 1.75 லட்சம் மக்கள் வெளியேற்றம்

கலிபோர்னியா: அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 29 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவிலுள்ள  கலிபோர்னியா மாகாணத்தில் நபா, சோனோமா, யுபா, மென்டோசினோ உள்ளிட்ட 8 நகரங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன் காட்டுத்தீ பரவியது.

விவசாய நிலங்களை கொண்ட  இப்பகுதிகளில் திராட்சைப் பழம், காய்கறிகள் உள்பட விவசாயப் பொருட்கள்  அதிக அளவில் பயிர் செய்யப் பட்டுள்ளன. திராட்சை தோட்டங்கள் அதிகமாக இருப்பதால் இந்தப் பகுதிகளில்  ஒயின் தொழிற்சாலைகள் பெருமளவில் உள்ளது.

தற்போது மழையில்லாதா காரணத்தினால் இந்தப் பகுதியில்  வறட்சி நிலவி வருகிறது. திடீரென  வனப்பகுதியில் ஏற்பட்ட  தீயினால் மளமளவென தீ பிடித்தது எரிய ஆரம்பித்தது.

அதோடு பலத்த காற்றும் அடித்ததால்  தீ நகரப் பகுதிகளுக்கும் பரவியது.

காட்டுத் தீயை கட்டுப் படுத்த முடியாமல் தீ அணைப்பு வீரர்கள் திணறி வந்தனர். இதனால் 8 ஆயிரம் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும், முயற்சியில் இறங்கினர்.

இருந்தாலும் தீ கட்டுக்குள் கொண்டு வரவில்லை. 2 ஆயிரம் கட்டிடங்கள், பண்ணை வீடுகள், குதிரைப் பண்ணை மற்றும் கால் நடைப் பண்ணைகளும் தீயில் எரிந்து நாசமாகியது.

எனவே வனப்பகுதிகளை ஒட்டி தங்கியிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.   100-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.

தீக்காயங்களோடு ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் 1 லட்சத்து 75 ஆயிரம் மக்கள் கலிபோர்னியாவை வீட்டு வெளியேறி பாதுகாப்பான பகுதிகளில் குடியேறியுள்ளனர்.

.

மூலக்கதை