யுனெஸ்கோவில் இருந்து இஸ்ரேல் அமெரிக்கா வெளியேறியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
யுனெஸ்கோவில் இருந்து இஸ்ரேல் அமெரிக்கா வெளியேறியது

வாஷிங்டன்: யுனெஸ்கோவில் பாலஸ்தீனத்துக்கு நிரந்தர உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டது. இதனால் இஸ்ரேலுக்கு எதிராக யுனெஸ்கோவின் நடவடிக்கை காரணமாக அதில் இருந்து வெளியேறுவது என அமெரிக்கா முடிவு செய்தது.

இதையடுத்து அதிகாரப்பூர்வ கடிதத்தையும் அனுப்பியுள்ளது. இதுகுறித்து யுனெஸ்கோவின் தலைவர் இரினா போகோவா கூறுகையில், யுனெஸ்கோவில் இருந்து விலகுவது குறித்து அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ கடிதம் வந்துள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவால் யுனெஸ்கோவுக்கும், அந்நாட்டிற்கும் இழப்பு. இது மிகுந்த வேதனையை அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.

அதே வேளையில் அமெரிக்கா வெளியேறியதால் இஸ்ரேலும் விலகுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது டுவிட்டரில், அமெரிக்கா வெளியேறியதால் இஸ்ரேலும் வெளியேற முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இது சர்வதேச அளவில்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை